Home » » O.I.C விடுமுறையில் செல்ல அனுமதி மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டேன்-- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் 4 பேரை சுட்டு கொலை செய்த பொலிஸ்உத்தியோகத்தர் வாக்குமூலம்

O.I.C விடுமுறையில் செல்ல அனுமதி மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டேன்-- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் 4 பேரை சுட்டு கொலை செய்த பொலிஸ்உத்தியோகத்தர் வாக்குமூலம்




தான் விடுமுறையில் வீடு செல்ல திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி மறுத்தனால் ஏற்பட்ட கோபம் காரணமாக துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளதாக பொலிசார் 4 பேரை சுட்டு கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்
ரவீந்து குமாரவிடம் பொலிசார் மேற்கொண்டவிசாரணையின் போதுஇது தெரியவந்துள்ளது.

கடந்த 24 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிசார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 4 பொலிசார் உயிரிழந்த சம்பவம் பொலிசாரை மட்டுமல்லபொதுமக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பொலிசாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸ் நிலையங்கள் மட்டுமல்ல பாதுகாப்பு துறையில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் இவ்வாறு தன்னுடன் கடமையாற்றி வந்த சகநண்பர்களான 4 பொலிசாரை பொலிஸ்; ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ளமை இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்மையான ஒரு துயரமான சம்பவமாகும் இதுவாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் 54 பொலிசார் கடமையாற்றிவருகின்றனர் இந்த நிலையில் பொலிஸ் சேவையில் 22 வருட கால சேவையாற்றிவரும் சியம்பலாண்டுவ அத்திமலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த வனநிங்க மதியன்சலாகே ரவீந்து குமார என்ற பொலிஸ் உத்தியோகத்தர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றி வருகின்றார்.

இவர் தான் விடுமுறையில் வீடு போவதற்கு அப்போது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக இருந்த அதிகாரியிடம் அனுமதி கோரியுள்ளர் அதற்கு அந்த அதிகாரி பொலிஸ் பொறுப்பதிகாரி தற்சமயம் விடுமுறையில் உள்ளதுடன் உனது பிரிவான போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியிடம் அனுமதி பெற்றுவருமாறு கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் சாஜன் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியிடம் விடுமுறைக்காக அனுமதி கோரிய நிலையில் குறித்த பிரிவில் கடமையாற்றிவரும் பொலிசார் விடுமுறையில் சென்றுள்ளதாகவும் அவர்கள் கடமைக்கு திரும்பியதும் விடுமுறையில் செல்லமுடியும் என்றுள்ளார்.
 
அதேவேளை 23 ம் திகதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுமுறையில் இருந்து கடமைக்கு திரும்பிய நிலையில் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த அதிகாரி விடுமுறையில் வீடு சென்றுள்ளார். இவ்வாறான நிலையில் கடந்த 35 நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் வீடு சென்றதுடன் 3 வது கொரோன தடுப்பூசி ஏற்றிய பின்னரும் விடுமுறையில் வீட்டிற்கு சென்று வந்த பொலிஸ் சாஜன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறையில் செல்ல அனுமதி கோரியுள்ளார் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவதினமான 24 ம் திகதி வெள்ளிக்கிழமை பகல் கடமையில் ஈடுபட்ட பொலிசார் தமது கடமைகள் மாலை 6 மணிக்கு முடிந்த பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில் இரவு கடமையினை பெறுப்பேற்ற பொலிசார் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தேவாலயங்களுக்கு பாதுகாப்பு கடமைக்காக சென்றுள்ளதுடன் பொலிஸ் நிலைய கரியாலயத்தில் கடமையாற்றும் சுமார் 5 பொலிசார் மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் பொலிசார் இருந்துள்ளனர்.

அதேவேளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவரது ஜீப் வண்டியில் சாரதியுடன் தேவாலயங்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருபவர்களை பார்ப்பதற்காக ரவுட் போயிருந்த நிலையில் அப்போது அவருக்கு காஞ்சிரம் குடா பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றுக் கமைய ஜீப்வண்டியை விட்டு இறங்கி சாரதியை ஜீப்வண்டியுடன் பொலிஸ் நிலையத்துக்கு போகுமாறு தெரிவித்துவிட்டு.
மோட்டர்சைக்கிளில் சென்ற அடுத்த பொலிஸ் சாரதி உட்பட இரு பொலிசாருடன் இரு மோட்டர் சைக்கிளில் காஞ்சிரம்குடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இரவு 11 மணியளவில் பகல் கடமையை முடித்துவிட்டு இருந்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர் குமார திடீரென பொலிஸ் நிலைய வாசலில் கடமையில் இருந்த பொலிஸ் ஒருவரின் துப்பாக்கியை பறித்து முதலில் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதார்.
அதனை தொடர்ந்து அவரைநோக்கி சுட்டவேளை அவர் தனது உயிரை காப்பாற்ற அங்கிருந்து காயத்துடன் தப்பி ஓடி ஒளிந்து கொண்டார்.
இதன் போது பொலிஸ் நிலையத்துக்குள் கடமையில் இருந்தவர்கள் மீது பொலிஸ் உத்தியோகத்தர் திடீரென துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பொலிஸ் சாஜன் காதர் மற்றும் பொலிஸ் கான்ஸடபிள் புரபுத்த படுகாய மடைந்தார்.
இதனை தொடர்ந்து பொலிஸ் நிலைய கட்டிடத்தில் காரியாலயத்தில் ஆயுத களஞ்சியம் மற்றும் றிசேவ் கடமையில் இருந்த பெலிஸ் கான்ஸ்டபில் துப்பாகி வெடிச் சத்தம்கேட்டு கட்டிடத்தை விட்டு வெளியே வந்தபோது அவரை நோக்கி துப்பாகிதாரி துப்பாகி பிரயோகம் செய்ததையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் காரியால அறையினுள் சென்று மறைந்தபோது அங்கு துரத்தி சென்ற துப்பாக்கிதாரி அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு துப்பாக்கியால் ஆயுத களஞ்சியசாலை பூட்டை துப்பாக்கியால் வெடிவைத்து உடைத்து அங்கிருந்து சுமார் 30 மேற்பட்ட ரி 56 ரக துப்பாகியின் ரவைகள் கொண்ட மகசீனை ஏடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி பொலிஸ் நிலைய பகுதியில் இருந்துள்ளார்.
இந்த நேரத்தில் இங்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியாத நிலையில் பொலிஸ் நிலையத்துக்குள் பொலிஸ் சாரதி துஸரா ஜீப்வண்டியுடன் உள்நுழைந்துள்ள நிலையில் ஜீப் வண்டி மீது துப்பாகிதாரி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து சாரதி படுகாயமடைந்ததையடுத்து ஜீவ் வண்டி தடுமாறி அங்கிருந்த கட்டிடத்துடன் மோதி நின்றுள்ளது.
இவ்வாறன நிலையில் மோட்டர் சைக்கிளில் காஞ்சிரம்குடாவை நோக்கி சென்று கொண்டிருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சத்தம் கேட்பதாக தகவல் ஒன்று வந்ததையடுத்து அவர் உடனடியாக அவருடன் சென்ற பொலிசாரை திரும்புமாறு தெரிவித்து கொண்டு அவர் மோட்டர்சைக்கிளை திருப்பிக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்குள் சென்றனர்.
அப்போது அவர்களுக்கு இங்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியாத நிலையில் உட்சென்ற போது அங்கு ஜீப்வண்டி கட்டிடத்துடன் மோதிய நிலையில் ஜீப்வண்டியின் லைற் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அங்கு சென்ற போது துஸரா துப்பாக்கி சூட்டில் இரத்த வெள்ளத்தில் இருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்து அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டும் என அவருடன் சென்ற பொலிசாருக்கு தெரிவித்துக் கொண்ட நிலையில் மீண்டும் பொலிஸ் பொறுப்பதிகாரியை நோக்கி துப்பாக்கிதாரி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்ததுடன் உடனடியாக அனைவரும் கீழே வீழ்ந்து படுத்துக் கொண்டனர்.
இருந்தபோதும் சரமாரியான துப்பாக்கி பிரயோகத்தை துப்பாக்கிதாரிமேற்கொண்டதால் அவனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு இவர்களிடம் ஒரு துப்பாக்கிகூட கையில் இல்லாத நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்ற பொலிஸ் உத்தியோகத்தரிடம் மின்சாரத்தை அனைக்குமாறு தெரிவித்த போது அதனை அனைப்பதற்கு பொலிஸ் சாரதியான குமார தலைக்கவத்துடன் எழுந்தபோது அவர் மீது மேற்கொண்ட துப்பாகி பிரயோகம் அவரின் தலைக்கவத்தை ஊடறுத்து சென்றதுடன் அவருக்கு தலையில் எதுவித பாதிப்பும் ஏற்படாத நிலையில் அவரும் படுகாயமடைந்ததுடன் அவர் மின்சாரத்தை துண்டித்ததையடுத்து அங்கு இருட்டான நிலை ஏற்பட்டது
இனை தொடர்ந்து அங்கிருந்து கைதுப்பாக்கி ஒன்றை எடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி துப்பாகி பிரயோகம் மேற்கொண்டுவரும் துப்பாகிதாரி பக்கம் துப்பாக்கி சூடு நடாத்தினார் அப்போது அதற்கு பதிலாக துப்பாக்கிதாரியும் அவர்களை நோக்கி சுட்டான் இவ்வாறு சுமார் 10 நிமிட துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி துப்பாக்கி சூட்டை நிறுத்திவிட்டு உயர் அதிகாரி மற்றும் அக்கரைப்பற்று பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

இதனையடுத்து அங்கு சுமார் 20 நிமிடத்தில் அக்கரைப்பற்று பொலிசார் சென்று அங்கு படுகாயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்த நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சாஜன் தனது சொந்தமான ஜீப்வண்டியை ஏற்கனவே பொலிஸ் நிலையத்துக்கு வெளியே உள்ள வீதி ஒன்றில் நிறுத்தி வைத்துவிட்டு இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு
அங்கிருந்து தனது உடைகளுடனான பாக்கியையும் துப்பாக்கி ரவைகள் கொண்ட சுமார் 19 மகசீன்களுடன் இரு துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி தனது வீடான அத்திமலைக்கு சென்று தாயாரிடம் தனக்கு லீவு தராததால் இவ்வாறு செய்ததாக தெரிவித்து விட்டு அத்திமலை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிகளுடன் சரணடைந்துள்ள துப்பாக்கிதாரியான பொலிஸ் சாஜன் தான் வீடு செல்ல விடுமுறை கோரியபோது அதனை அனுமதிக்காத காரணத்தினால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது அதிக கோபத்துடன் இருந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த சூட்டு சம்பவத்தில் பொலிஸ் சாரதியான சியம்பலாண்டுவையைச் சேர்ந்த திஸநாயக்க முதியன்சாலாக துஸரா பொலிஸ் கான்ஸ்டபிள்களான கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த அழகுரத்தினம் நவீன் பிபிலையைச் சேர்ந்த சலகா பண்டாரநாயக்க இஸரா புhபுத்தஇ ஒலுவிலைச் சேர்ந்த 53 வயதுடைய பொலிஸ் சாஜன் கலந்தர் லெப்பை அப்துல் காதர் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்
படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட பாலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 பேரில் இருவர் சிகிச்சை பெற்று வைத்திசாலையில் இருந்து வெளியேறியதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இடது தோள் பட்டை ஊடாக குண்டு பாய்ந்ததில் அவரின் கை இயங்காத நிலையடைந்துள்ளதுடன் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்

இதேவேளை திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் மா அதிபர் விஜயம் ஒன்றை 26 திகதி மேற்கொண்டு சம்பவம் தொடர்பாக ஆராயந்ததுடன் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரனைகளை மேற்கொண்டு; 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் கட்டளையிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |