நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை 16 பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
நிந்தவூர் 10 அட்டப்பள்ளம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் தனது குடும்பத்தாருடன் அன்று பிற்பகல் பொழுதுபோக்கிற்காக அட்டப்பள்ளம் கடற்கரை பிரதேசத்திற்கு சென்றுள்ளார். இதன் போது கடற்கரைப் பிரதேசத்தில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழந்த சிறுவன் நிந்தவூர் 10 ம் பிரிவு அட்டப்பள்ளம் சமாதான கிராமத்தில் வசித்து வரும் ஆர் இன்ஸான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: