Advertisement

Responsive Advertisement

நற்பிட்டிமுனை கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த வர்ண இரவு நிகழ்ச்சி.



( தாரிக் ஹஸன்)

நற்பிட்டிமுனை கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த வர்ண இரவு நிகழ்ச்சி.
நற்பிட்டிமுனை பிரதேச  விளையாட்டு கழகங்களில் ஒன்றான நற்பிட்டிமுனை கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த வர்ண இரவு சிறப்பு நிகழ்ச்சியும், வீரர்கள் கௌரவிப்பும், விருது வழங்கும் நிகழ்வும் கழகத்தின் தலைவர் ஆசிரியர் றிலாஸ் அவர்களின் தலைமையில்  அண்மையில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மயோன் குரூப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி பொறுப்பாளருமான றிஸ்லி முஸ்தபா  பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் வீரர்களுக்கு விருதுகளை தமது கைகளால் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச பிரமுகர்களும் , கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments