( றம்ஸீன் முஹம்மட்))
அமரத்துவம் அடைந்த மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க செயலாளர் அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களுக்கு மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய நினைவஞ்சலி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரடியில் அமைந்துள்ள மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தில் சங்கத்தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தீபச்சுடர் ஏற்றப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அமரத்துவம் அடைந்த வே.தவராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடைய மௌன அஞ்சலிப்பிரார்த்தனையும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து
சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களால் வரவேற்புரையும் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னராக அமரர் வே.தவராஜா அவர்களின் ஆசிரியப்பணியின் சிறப்பினை பற்றி மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் திரு.வே.அமிர்தலிங்கம் அவர்களாலும் அமரர் வே.தவராஜா அவர்களின் தமிழ்ப்பணியும் தமிழ்ச்சங்கமும் என்ற தலைப்பில் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் திரு.ச.தங்கராசா அவர்களாலும் அமரர் வே.தவராஜா அவர்களின் சமூகவாழ்வியலோடு பிணைந்த கொள்கைசார் பற்றுறுதி பற்றி மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைச்செயலாளர் திரு.இ.பிரதீஸ்காந்த் அவர்களாலும் அமரர் வே.தவராஜா அவர்களின் ஆன்மாவின் பேறு என்ற தலைப்பில் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் சைவப்புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம் அவர்களாலும் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க கணக்காய்வாளர் கலாபூஷணம் கா.சிவலிங்கம் அவர்களால் கவிதாஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.அதனை அடுத்து அமரர் வே.தவராஜா அவர்கள் தொடர்பான நினைவுசார் மனப்பதிவுகள் கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி முரளீஸ்வரன் அவர்களாலும் ஆசிரியர் த.சிவகுமார் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுக்கான ஏற்புரையினை அமரர் வே.தவராஜா அவர்களின் புதல்வி திருமதி தனுஷனா சுகந்தன் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் திருமதி பிரியா கருணாகரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
0 Comments