Home » » பேரதிஷ்டத்தினை நழுவ விட்ட இலங்கை! காரணம் கூறிய இராஜாங்க அமைச்சர்

பேரதிஷ்டத்தினை நழுவ விட்ட இலங்கை! காரணம் கூறிய இராஜாங்க அமைச்சர்

 


இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட “ஆசியாவின் ராணி” (Queen of Asia) என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கல்லை டுபாய் நிறுவனமொன்று வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் (Lohan Ratwatte) வினவிய போது,

அந்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை. டுபாய் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலையை அறிவித்திருந்தது.

அதனை விடவும் அதிக விலை எதிர்பார்ப்பில் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்காக 100 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது. அதன் இலங்கை பெறுமதி 2000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியாகும்.

310 கிலோ கிராம் நிறையுடைய ஆசியாவின் ராணி என அழைக்கப்படும் இந்த நீல இரத்தினக்கல் இரத்தினபுரி, பலாங்கொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |