திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினால் கவனயீர்ப்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முண்ணனியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி அருன் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தலைமையில் இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மாலை திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்பினை வெளிக்காட்டினார்கள்.
நாட்டை விற்காதே,மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளாதே,எண்ணெய் வளத்தை பதுக்கல் அராஜகத்தை நிறுத்து போன்ற துண்டுப் பிரசுரங்களை கவனயீர்ப்பில் ஏந்தியிருந்தார்கள்
0 Comments