Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அரசாங்கத்தை விமர்சித்த சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!

 


இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.


இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (செவ்வாய்யக்கிழமை) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இவ்வாறு அவர் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடுக்கு அரசாங்கமே காரணமென நேரடியாக அரசாங்கத்தை விமர்சித்திருந்த நிலையில், இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுசில் பிரேமஜயந்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments