Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பிரதேசத்தில் வேன் விபத்து.!

 


 

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து மின் இணைப்பு கட்டையுடன் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவது 

சுற்றுலாப்பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு மட்டு கல்முனை பிரதான வீதியூடாக ஒலுவில் பிரதேசத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேனே வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி மின்சாரத்தூணுடன் மோதி குடைசாய்ந்துள்ளது .




இவ் விபத்தின் போது வேனில் பயணித்த சிறுமி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் வேனும் பாரியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளது. இப் பிரதேசத்தில் தொடர்ந்து நிலவிக்கொண்டிருக்கும் மழையுடன் கூடிய வானிலையும் இவ் விபத்துக்கு துணைநின்றிருக்கலாம் என நம்பப்படுகிறது 

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments