இந்த ஆண்டில் இலங்கை 138,000 மில்லியன் ரூபாவை (6.9 பில்லியன் அமெரிக்க டொலர்) கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அத்துடன், நடப்பு அரசாங்கத்தினால் குறித்த கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகள் இதுவரையில் எவ்வித பிரச்சினையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் இவ்வாறே செயற்படும்.
கடன் செலுத்தப்படும் அதேவேளை, மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments