Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பதியத்தலாவ , மகாஓயா வீதி வாகனப் போக்குவரத்திற்கு உதவாத நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகின்றது.

 


( அஸ்ஹர் இப்றாஹிம்)


அம்பாறையிலிருந்து கண்டி மற்றும் கொழும்பிற்கு செல்லும் பிரதான பாதையாகிய பதியத்தலாவ , மகாஓயா வீதி வாகனப் போக்குவரத்திற்கு உதவாத நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகின்றது. இதனால் இப் பாதையை பயன்படுத்துவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அண்மையில் பெய்த மழை காரணமாகவும் கனரக வாகனங்களின் போக்குவரத்தாலும் இவ்வீதி பழுதடைந்து சீரற்று குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
அம்பாறையில் கடந்த சில வருடங்களுக்கு முன் இடம்பெற்ற ” தெயட்ட கிருல்ல ” அபிவிருத்தி திட்டத்தின் போது அம்பாறை நகரிலுள்ள சிறிய வீதிகள் கூட கார்பட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்ட போது இந்த வீதி அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் வாதிகளின் அசமந்தத்தினால் கவனிப்பாரற்று கைவிடப்பட்டுள்ளது.
இவ்வீதியினால் பயணிக்கும் போது வழமையான நேரத்தை விட கூடிய நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. கண்டி மற்றும் கொழும்பு போன்ற இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளிகள் மிக கஸ்டமான நிலையிலேயே பயணிக்க வேண்டியுள்ளது.
இவ்வீதி பல வருடங்களாக இந்த நிலையிலேயே காணப்படுகின்றது.இவ்வீதியால் பொதுமக்கள் மாத்திரமல்ல இம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , திணைக்கள தலைவர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் பயணம் செய்கின்றனர்.
செங்கலடியிரிருந்து மகாஓயா , பதியத்தலாவ போன்ற இடங்களினூடாக செல்லும் வீதி அழகாக செப்பனிடப்பட்டுள்ளது போல் இவ்வீதியையும் செப்பனிட்டு தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொது மக்கள் கேட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments