Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் அரிய வகை உயிரினம்!

 


கொலன்னாவ கொப்பகந்த பிரதேசத்தில் அரிய வகை வெள்ளை முள்ளம்பன்றி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எம்.பியதிஸ்ஸ என்பவரின் வீட்டுக்கு அருகாமையில் காணப்பட்ட பொறியொன்றில் சிக்கியிருந்த இந்த முள்ளம்பன்றி தொடர்பில் அவர் உடவலவ வனவிலங்கு காரியாலயத்திற்கு அறிவித்துள்ளார்.

உடன் விரைந்த அதிகாரிகள் முள்ளம்பன்றியை பாதுகாப்பாக மீட்டு, அதற்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

இவ்வாறான  முள்ளம்பன்றிகள் மிகவும் அரிதானவை எனவும், பொறியில் சிக்கியதனால் படுகாயமடைந்துள்ளதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வனவிலங்கு திணைக்கள அதிகாரி விஜித பெரேரா தெரிவித்துள்ளார்.

அல்பினோ முள்ளம்பன்றிக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments