பலம் பொருந்திய அமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகப் பலம் பொருந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் நோக்கில், சிறிலங்கா சுதந்திர கட்சியானது ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments