Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட நபர் குறித்து வெளியான புதிய செய்தி

 


இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ள நிலையில், இவர்களில் ஒருவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான, விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களில் இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், வைரஸ் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுப்பது முடியாமல் போயுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நபர் நாட்டிலிருந்து வெளியேறிய நபராக எங்களிடம் தகவல் உள்ளது.

ஆனால், அவர் எவ்வாறு வெளியேறினார் என்பது குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான, விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments