Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மனைவியின் தகாத உறவு அம்பலம்; மனைவி தாக்கி கணவன் பலி !

 


நுவரெலியா - பீட்று தோட்டத்துக்குரிய சின்னகாடு பிரிவில் தனி வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (25) காலை நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


மூன்று பிள்ளைகளின் தந்தையான சண்முகம் தர்மராஜ் வயது (44) என்ற நபரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் என நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்லால் தாக்கப்பட்டு காயங்களுடன் வீட்டில் உயிரிழந்து கிடந்த நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவரின் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையில் உள்ள தகாத உறவு அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் கணவரை மனைவி தாங்கி கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் நீதவானின் விசாரணைக்காக சம்பவம் இடம்பெற்றுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின் சடலம் சட்ட வைத்தியர் ஊடான பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments