Home » » இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர் - வெளிவந்த மேலதிக தகவல்கள்

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர் - வெளிவந்த மேலதிக தகவல்கள்

 


இலங்கையில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் கொவிட் தொற்றாளர் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர் 25 வயதுடைய யுவதி ஒருவர் என தெரியவந்துள்ளது.

இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) இதனைத் தெரிவித்தார்.

கடந்த 24 ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து இலங்கை வந்து மாரவில பிரதேசத்தில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"நைஜீரியாவில் இருந்து வந்த 25 வயதுடைய பெண் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார். தொற்றாளர் தற்போது அவரின் வசிப்பிட பிரதேசத்தில் உள்ளார். குறித்த யுவதி தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றிருந்தார். குறித்த காலப்பகுதியில் அவர் தனியான அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளார். அவ்விடத்தில் இருந்து வைரஸ் வேறு நபர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என கூற முடியாது. ஆனால் வாய்ப்புகள் மிக குறைவு.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் பயண விபரங்கள் மற்றும் அவரிடம் பழகியவர்கள் தொடர்பில் எமக்கு தெரியாது. அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு வௌிநாட்டில் இருந்து வந்த நபர்கள் இந்த வைரஸை கொண்டு வர வாய்ப்புள்ளது. அவ்வாறான நபர்களையும் மிக விரைவில் கண்டுபிடிக்ககூடியதாக இருக்கும் என நம்புகிறோம்" என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |