Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையர் எரித்துக் கொலை - பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

 


பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில்.... சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட இன்றைய நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். நான் விசாரணைகளை மேற்பார்வையிட்டு வருகிறேன். இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments