Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

போக்குவரத்து கட்டணங்களில் உயர்வு! கோருகிறது பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள்

 


எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன (Kemunu Wijeratne) கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணமாக 25 ரூபாவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அத்துடன், ஆகக்குறைந்தது 20 வீதத்திலாவது பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெறவேண்டுமாக இருந்தால் எரிபொருள்களின் விலையினை உயர்த்த வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் காப்ரல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நள்ளிரவு தொடக்கம் விலைகள் உயர்த்தபட்டன.

இந்நிலையில், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் ஆகியன இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளன.

Post a Comment

0 Comments