சிறிலங்காவில் இரண்டு வாரங்களுக்கு போதுமான அந்நிய செலாவணியே கையிருப்பில் இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவலை இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டப்ளியூ.ஏ.விஜேவர்தன வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாடு எதிர்நோக்கி இருக்கும் பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் கூட தாமதமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது எனவும் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அந்நிய செலாவணி கையிருப்பானது இரண்டு வாரங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மாத்திரமே போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையின் கீழ் நாட்டின் வெளிநாட்டு சொத்துக்களின் கையிருப்பானது கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments