மட்டக்களப்பில் கடந்த 6ம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஆசிரியர் சங்கம் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கமும் இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கமும் இணைந்து இன்று பகல் 2 மணியளவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 6ம் திகதி பழைய மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாட்டின் காரணமாக குறித்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் பிள்ளையான் குழுவின் குண்டர்களால் ஆசிரியர்கள் தாக்கப்பட்டதால் அதற்கான நீதியான விசாரணை காத்தான்குடி காவல்துறையினர் நடத்த வேண்டும்.
அமைச்சர் சரத் வீரசேகர இதற்கான சரியான பதிலை தராத பட்சத்தில் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments