Advertisement

Responsive Advertisement

சர்வதேச கடற்பரப்பில் வெளிநாட்டுப் பிரஜைகளை கைது செய்த சிறிலங்கா கடற்படை


 சர்வதேச கடற்பரப்பில் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகளை  சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஆறு வெளிநாட்டுப் பிரஜைகளை 250 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்த சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சர்வதேச கடற்பரப்பில் வைத்து மீன்பிடிப் படகு ஒன்று சோதனையிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 900 கடல் மைல் தொலைவில் வைத்து மீன்பிடிப் படகு ஒன்றில் போதைப் பொருள் கடத்திய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட போதைப் பொருட்களையும்,  கடற்படையினர் இலங்கைக்கு அழைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Post a Comment

0 Comments