Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் வெடி மருந்து

 


பொற்றாசியம் - பெர்குளோரைட்டு எனப்படும் 25 கிலோ வெடி மருந்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதன்போது தான் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காகவே அவற்றை அனுமதியுடன் கொண்டு வந்ததாகவும் குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment

0 Comments