Home » » துப்பாக்கி பிரயோகம்

துப்பாக்கி பிரயோகம்

 


அரியாலை நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவரே காயமடைந்தார். அவர் பொலிஸ் காவலில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன், மணல் ஏற்றிய பெட்டியுடன் உழவு இயந்திரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |