12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை அவரது கால்களைப் பிடித்து பா லத்திலிருந்து ஆற்றில் வீசிய பல்கலைக்கழக மாணவன் ஒருவரைக் கொடக்கவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்வி நடவடிக்கைக்காக சென்றுக்கொண்டிருந்த தரம் 7 இல் கல்வி கற்கும் மா ணவர் ஒருவரே இவ்வாறு ஆற்றில் வீசப்பட்டுள்ளார்.
இதனைக் கண்ட பிரதேச மக்கள் குறித்த மாணவனை மீட்டு வைத்தியசாலை யில் அனுமதித்துள்ளனர். சந்தேக நபரான பல்கலை மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
0 Comments