Advertisement

Responsive Advertisement

மியன்மாரில் அரங்கேறிய கொடூர செயல்! 30 அப்பாவி மக்களை சுட்டுகொன்று எரித்த இராணுவத்தினர்

 


மியன்மாரில் அப்பாவி மக்களை இராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரில் சமீப காலமாக இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை இராணுவம் கைது செய்து சித்ரவதை செய்து கொலை செய்வதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் மியன்மாரின் கிழக்கு பகுதியில் கயா மாகாணத்தில் உள்ள மோ சோ கிராமத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 30 பேரை இராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், மோ சோ கிராமத்தை சேர்ந்த மக்கள் இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் இருந்து தப்பிக்க மேற்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமை நோக்கி சென்றனர்.

இதன்போது அவர்களை இராணுவ வீரர்கள் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் கைது செய்த 30 பேரின் கை, கால்களை கட்டி சுட்டுக்கொன்றனர். அதனை தொடர்ந்து அவர்களின் உடல்களில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்தனர் என தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments