வாகனங்களின் விலைகளை அதிகரிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக வாகன தயாரிப்பு நிறுவனங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாகன தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகின்ற மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதை அடுத்தே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அந்த நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
இதன்படி, இந்த ஆண்டின் நான்காவது தடவையாக வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்தி சுசுக்கி மற்றும் மகேந்திரா ஆகிய இந்திய நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதானது, வாகன சந்தைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மகேந்திரா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
கார், மோட்டார் சைக்கிள், சிறிய ரக லொறிகள், பஸ் என பல்வேறு வாகனங்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதன்படி, இலங்கையிலும் வாகனங்களின் விலை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.
0 comments: