Advertisement

Responsive Advertisement

14 அடி நீளமான இராட்சத மலைப்பாம்பை மடக்கி பிடித்த மக்கள்!

 


திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 14 அடி நீளமான இராட்சத மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.


நேற்று (30) அதிகாலை இந்த பாம்பு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் நீதவான் நீதிமன்ற பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் இந்த மலைப் பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் மலைப்பாம்பு கடந்த இரண்டு நாட்களாக வந்து சென்றதை அப்பகுதியில் வசிப்போர் கண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மலைப்பாம்பினை பிரதேச பொது மக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments