Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருக்கும் 702 இலங்கையர்கள் - வெளியான திடுக்கிடும் தகவல்

 


இந்தியாவை தளமாகக் கொண்ட ISIS அமைப்பின் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 702 இலங்கையர்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ISIS உறுப்பினரின் வட்ஸ்அப் கணக்கு மூலம் இந்த 702 இலங்கையர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 702 பேரில் சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments