Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நீரில் மூழ்கி 21 வயது இளைஞன் பலி!


 மருதமுனை - பெரியநீலாவணை முஸ்லிம் வித்தியாலய வீதியில் வசித்து வந்த சுலைமான் லெப்பை சராப்கான் (வயது 21) என்பவர் நேற்று (31) மாலை மத்திய முகாம் பிரதேசத்தில் வாய்க்கால் நீரில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி மரணமானார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,


உயிரிழந்த இளைஞன் தனது நண்பர்களுடன் குறித்த தினத்தில் மாலை வேளையில் மத்திய முகாம் பிரதேசத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளார். இன்னிலையில் நீருக்குள் சென்றவர் திடீரென நீரில் மூழ்கியதை அவதானித்த நண்பர்கள் அயலவர்களின் உதவியுடன் மீட்டெடுத்து மத்தி முகாம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞனுடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை. ஜனாசா கல்முனை அஷ்ரப் ஆதாரவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரனைகளை மத்திய முகாம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

நண்பர்களுடன் மிக அன்பாக பழகும் இவர் மிகச் சிறந்த ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக்கழக கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் ஆவார். இவரது இழப்பால் மருதமுனை பிரதேசம் சோகமாக காணப்படுகின்றன. இவரது தந்தை சுலைமான் லெப்பை மிக அண்மையில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்தார். இவர் அல் -மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments