வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் கலவை தொடர்பான ஆய்வுகூட அறிக் கையை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்வதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வீட்டு எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள சர்ச்சையை கவனத்தில் கொண்டு, பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் ஊடாக இரண்டு எரிவாயு நிறுவனங்களின் மாதிரிகளும் ஆய்வுகூட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறிய ஆறு சம்பவங்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியிலான அச்சம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
வீட்டு எரிவாயு சிலிண்டர்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலையை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை பொலன்னறுவையைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந் துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.
0 comments: