Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கேரள கஞ்சா பொதியுடன் பாடசாலை மாணவன் கைது

 


குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பகுதியில்  பாடசாலை மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு கைது செய்ததுடன் குறித்த மாணவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி காவல்துறை அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டார மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி சி.ஐ.மணலகுமார,உப காவல்துறை பரிசோதகர் ராமநாயக்க உப காவல்துறை பரிசோதகர் வணசிங்க தலைமையிலான குழுவினர்  கஞ்சா பொதியை கைப்பற்றியதோடு,குறித்த மாணவனையும் கைது செய்துள்ளனர். 

மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இராணுவ புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த திங்கட்கிழமை மதியம் மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து 1 கிலோ 665 கிராம்,கேரள கஞ்சா போதைப்பொருளை  வைத்திருந்த  குற்றத்தில் புத்தளத்தில் வசிக்கும் 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments