மூன்று மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் (04) தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், நாளை மறுதினம் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சபரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அந்தந்த மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments: