Advertisement

Responsive Advertisement

இலங்கையில் இன்று பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள்: அமைச்சா் தயாசிறி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

 


இலங்கையில் இன்று பல்வேறு இடங்களிலும் தொழிற்சங்கப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.

யுகதனவி மின்சார நிலையத்தை அமரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மின்சாரசபை பணியாளா்கள், கொழும்பில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனா்.

இதற்கு துறைமுக தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தின. தொடரூந்து திணைக்கள தொழிற்சங்கத்தினா் வேதன உயா்வைக்கோாி, மருதானை தொழில்நுட்ப சந்தியில் ஆா்ப்பாட்டம் ஒன்றை நடத்தினா்.

வேதன உயா்வைக்கோாி தேசிய சேமிப்பு வங்கியின் பணியாளா்கள், கொள்ளுப்பிட்டி தலைமையகத்துக்கு முன்னால் ஆா்ப்பாட்டம் நடத்தினா்

தமது வேதன உயா்வைக் கோாி அதிபா் மற்றும் ஆசிாியா்கள் ஆமா் வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினா்.

இதேவேளை இன்று பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகிறவா்கள், அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவா்கள்.

எனவே அவா்களின் பிரச்சனைக்கு சாகமான வழியில் பதிலளிக்கவேண்டும் என்று ராஜாங்க அமைச்சா் தயாசிறி ஜெயசேகர இன்று செய்தியாளா்களிடம் தொிவித்துள்ளாா்.

இல்லையேல் அடுத்து வரும் தோ்தல்களில் அவா்கள் முன்னால் செல்லமுடியாதநிலை ஏற்படும் என்றும் தயாசிறி ஜெயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளாா்.             

   .             
Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery 

Post a Comment

0 Comments