Advertisement

Responsive Advertisement

மீண்டும் கட்டுப்பாடுகள்! சுகாதார அதிகாரிகள் கடும் எச்சரிக்கை

 


நாட்டில் நேற்று மேலும் 617 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டவர்களின் வீதம் 6%ஐ தாண்டியுள்ளது.

மக்களின் கவனக்குறைவால் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியிருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, புதிய வைரஸ் விகாரங்களால் நாட்டில் மற்றொரு கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments