Home » » அரசாங்கத்திற்கு நன்றி’ -இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவிப்பு

அரசாங்கத்திற்கு நன்றி’ -இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவிப்பு

 


வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுத்த நிதியமைச்சருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க(Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதனை இறுதி வெற்றியாக கருதக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் சமர்ப்பித்த பின்னர் சமூக ஊடகங்களில் அவர் இதனைத் தெரிவித்தார். இது சம்பள முரண்பாட்டில் மூன்றில் ஒரு பங்காகும் என்றும் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கினை வென்றெடுப்பதற்கான போராட்டம் நடைபெறுவதாகவும் ஜெயசிங்க குறிப்பிட்டார்.

தமது போராட்டம் சரியான திசையில் செலுத்தப்பட்டதால், ஊதிய வேறுபாட்டின் ஒரு பகுதியை தீர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவர் கூறினார். எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கைகளை வெளியிட ஆசிரியர் 'அதிபர்கள்' தொழிற்சங்கக் கூட்டமைப்பும் தலையிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |