Home » » நம்பி ஏமாந்த மக்கள் - பட்ஜெட் குறித்து வெளியான அறிவிப்பு

நம்பி ஏமாந்த மக்கள் - பட்ஜெட் குறித்து வெளியான அறிவிப்பு

 


நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால்(Basil Rajapaksa) முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பொது மக்களின் நலனுக்கான எதுவும் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல(Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலையேற்றம் மற்றும் வருமான இழப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இம்முறை வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால் அவர்களின் அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போயுள்ளதாக கிரியெல்ல தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும், இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கும், நாட்டுக்கு முதலீடுகளை வரவழைப்பதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்படாததற்கு எதிர்க்கட்சி வருத்தம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

அரசாங்க வருமானம் 500 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களே அந்த வருமானம் குறைவதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளினால் நாட்டுக்கு 500 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கிரியெல்ல தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை போக்க நீண்ட கால திட்டமொன்றை மக்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறானதொரு விடயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாறாக 2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாத, மக்களுக்கு நிவாரணம் இல்லாத வரவு செலவுத் திட்டத்தையே நிதியமைச்சர் சமர்ப்பித்ததாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |