2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(13) ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 தினங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
அதேநேரம் பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், அதன் மீதான விவாதம் 16 நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து, டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு 3 ஆம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments: