Advertisement

Responsive Advertisement

சகோதரனுடன் சென்றவரே பயணப் பைக்குள்ளிலிருந்து சடலமாக மீட்பு - வெளிவந்துள்ள பகீர் தகவல்

 


சபுகஸ்கந்த - மாபிம பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்,அண்மையில் தனது சகோதரனுடன் முச்சக்கரவண்டியில் ஏறி சென்ற நிலையில் தற்போது அவர் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் மொஹமட் சச்சி பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணை அவரது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகள் அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் மாளிகாவத்தையைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

அத்துடன் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்பதற்காக குறித்த பெண் மற்றுமொரு பெண் மற்றும் ஆண் ஒருவருடன் சென்றுள்ளதாகவும், பின்னர் குறித்த பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் அவர் காணாமல் போனதாக அவரது கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அத்துடன்அவரது சகோதரருடன் முச்சக்கர வண்டியில் பயணித்தது தெரியவந்துள்ளது. தற்போது சகோதரன் மற்றும் பெண் என இருவரையும் காணவில்லை எனவும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட பெண் வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்க்கையை நடத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments