Advertisement

Responsive Advertisement

இரசாயன களை நாசினிக்கு அனுமதி- பதிவாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!

 


இரசாயன களை நாசினி வகைகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய பதிவாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த களைநாசினி வகைகள் ஐந்திற்கான தடை நேற்றைய தினம் நீக்கப்பட்டது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்த்து.

இந்நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

களைநாசினி பயன்பாடு தொடர்பான பதிவாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindanda Aluthgamahe) தெரிவித்துள்ளார்.

இவ்வாறு  இரசாயன களைநாசினிகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் வர்த்மானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தாம் பதிவாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments