பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் மக்களை அணிதிரட்டி அரசாங்கத்திற்கு எதிராக “எதிர்ப்புப் பேரணி” ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. குறித்த பேரணியானது கொழும்பு - ஹைட்பார்க் கோணரிலிருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெருந்திரளான ஆதரவாளர்கள் கொழும்பை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
வெண்ணபுவ, போகம்பர, ஹல்துமுல்ல, அரலங்வில மற்றும் பாணங்துர போன்ற பகுதிகளில் இருந்து இவ்வாறு மக்கள் பேருந்துகளில் வருகின்றனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்திற்காக வருபவர்கள் காவல்துறையினரினால் சோதனைக்கு உட்படுத்தப்படு வருகின்றனர்.
மேலும் சில பகுதிகளில் வரும் ஆதரவாளர்களை திருப்பியனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இந்நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் சிறிலங்கா காவல்துறையினர் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீதிமன்றங்கள் ஊடான தடை உத்தரவு, புதிய சுகாதார வழிகாட்டிகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் வீதித்தடைகளை அமைத்து சோதனைக்கு உட்படுத்தி மக்களை திருப்பி அனுப்புதல் போன்ற செயற்பாடுகளை மும்முரமாக செயற்படுத்தி வருகின்றனர்.

0 comments: