கொத்மலை கொட்டகபிட்டிய கிராமத்தில் மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 20 குடும்பங்கள் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் (Ranchith Alakakon) தெரிவித்துள்ளார்.
இவர்கள் கிராமத்தில் இருந்து தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கொத்மலை பிரதேச செயலகம், பிரதேச இராணுவ முகாமில் கட்டளை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று மண் சரிவு ஏற்படும் அடையாளங்கள் தென்பட்ட இடங்களை ஆய்வு செய்துள்ளனர்.
இந்த கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் நிலத்திலும் வீட்டு சுவர்களிலும் வெடிப்பு ஏற்பட்டதை அவதானிக்க முடிந்ததாகவும் அழககோன் குறிப்பிட்டுள்ளார்.
கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொத்மலை நீர் தேக்கத்திற்கு மேல் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த கிராமம் மண் சரிவு ஏற்படும் ஆபத்துள்ள கிராமம் என அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அங்கிருப்பவர்களை அங்கிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை
0 Comments