எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் 16 வயதான பாடசாலை மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படும் மூன்று பேரை காவல்துறையினர் நேற்றுக் கைது செய்துள்ளனர்.
இந்த மாணவி நேற்று முன்தினம் பாடசாலையில் இருந்து வெளியில் வந்த போது, மூன்று பேர் மாணவியை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அந்த வீட்டின் மேல் மாடியில் இருந்த நபர் ஒருவர், மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். மாணவி அந்த நபரை தாக்கியதால், அம்முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவி அந்த இடத்தில் இருந்து வீட்டுக்குச் செல்ல வீதிக்கு வந்திருந்த போது, ஒருவர், மாணவி வீட்டுக்கு செல்ல உதவியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை நடத்தி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments