பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், பொது சுகாதார வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், தேவையற்ற வகையில் கூட்டம் கூடுவதை தடுக்க முடியாது என்றும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதம நிபுணர் டொக்டர் சமித்த கினிகே(Dr. Samitha Ginike) தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தைக்கு காரணமானவர்களைக் கட்டுப்படுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என்றும், இன்னும் இரண்டு வாரங்களில் இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக உயரும் எனவும் அது சாத்தியம் என்றும் தெரிவித்தார்.
0 comments: