Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் பாரிய கொள்ளை - விசாரணைகள் ஆரம்பம்

 


வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்திற்கு சொந்தமான 38 பவுண் தங்கத் தகடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட 38 பவுண் எடை கொண்ட தங்கத் தகடு 2019 ஆம் ஆண்டு பக்தர் ஒருவரால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த தங்கத் தகடு திருடப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Post a Comment

0 Comments