நாடு முழுவதும் உள்ள அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளின் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் விதம் தொடர்பிலான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.
இந்த வகுப்புக்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அந்த வகுப்புக்களுடன் தொடர்புடைய பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுடைய தாய்மார் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க தேவையில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், நோய்களுக்காக சிகிச்சைகளை பெற்று வரும் ஆசிரியர்கள், அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரமே பாடசாலைகளுக்கு அழைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 Comments