ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சீய்ரா லியோன் நாட்டில் பெட்ரோல் தாங்கி ஒன்று வெடித்ததில் 80இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் எரிபொருள் சேமிப்பு கிடங்கும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 91 பேர் வரையில் உயிரிழந்தள்ளனர் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments