Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியுடன் இணையும் 30 கட்சிகள்: சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்


முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) தலைமையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்காத 30 கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்கள் பொதுவான கூட்டமைப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் செயற்படுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இன்று முதற்கட்ட பேச்சுவார்தையில் ஈடுபடவுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய ஆளும் அரச தரப்பில் பல்வேறு உள்ளக முரண்பாடுகள் ஏற்பட்டுவரும்  நிலையில், பங்காளிக் கட்சிகள் கடும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்காத 30 கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்கள் மைத்திரி தரப்புடன் இணைந்து பயணிக்க இருப்பதான செய்தி தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments