சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவினால் இன்று (12) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 13ம் திகதி முதல் 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 22ம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.
அதன்பின்னர் ஆரம்பமாகும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெறவுள்ளது.
இலங்கை வரலாற்றில் இந்த வரவு செலவுத் திட்டம் மிக முக்கியமான வரவு செலவுத்திட்டமாக கருதப்படுகின்றது.
2019ம் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து பரவி வரும் கொவிட் வைரஸ் ஆகிய காரணங்களினால் நாட்டின் பொருளாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார பாதிப்பு, மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ள பின்னணியிலேயே, இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றது.
மக்கள் நிவாரணத்தை எதிர்பார்த்திருக்கும் இந்த தருணத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் குறித்து, நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
0 Comments