Advertisement

Responsive Advertisement

தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2019/2020 ஆம் ஆண்டிற்கான தீவளாவிய ரீதியிலான விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் மட்/பட்டிருப்பு தே.பா வெற்றி

 


தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2019/2020 ஆம் ஆண்டிற்கான தீவளாவிய ரீதியிலான விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் கொவிட் சூழ்நிலைக்கு மத்தியிலும் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ள மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையைச் சேர்ந்த 

1. வரதராஜன் சித்தசன்

2. குணவர்த்தன அபிலாசனன்

3. நடேசன் கிருந்திகரன் 





 குழுவினையும், தொடர்ச்சியாக தன் சிறந்த வழிகாட்டலின் கீழ் மாணவர்களை நெறிப்படுத்தி வெற்றிகள் பலவற்றை சுவைக்கச் செய்கின்ற எமது இரசாயனவியல் ஆசான் திரு செ. தேவகுமார் ஐயா அவர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம். அத்துடன் இப்போட்டியில்  ஆசானின் வழிகாட்டலின் கீழ் எமது பாடசாலை சார்பாக மூன்று ஆராய்ச்சிகள் பங்குபற்றி மூன்றும் TOP10 இற்கான போட்டிக்கு (TOP20 winners ஆக) தேர்வு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதில் பங்குபற்றி தமது திறமைகளை திறம்பட வெளிப்படுத்திய சத்தியமோகன் துஷாரகேஷ், தவேந்திரன் மிதுரங்கன், துரைராஜா யதுசன், பரமலிங்கம் ஹரிநாத், மேகநாதன் கஜவதனன், வசந்தராசா கஜன் ஆகியோரையும் சாதனைகளுக்கு பக்கபலமாக இருக்கின்ற பெற்றோரையும் பாடசாலை சமூகத்தையும்  ஏனைய நல்லுள்ளங்களையும் பாராட்டுகின்றோம்.


சோதனைகள் கடந்து சாதனைகள் தொடரட்டும்......

Post a Comment

0 Comments