Advertisement

Responsive Advertisement

பிறப்பு, விவாக மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை நிகழ்நிலை (Online) மூலமாக விண்ணப்பிப்பதற்கான வசதிகள்...!!!


 பிறப்பு, விவாக மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை நிகழ்நிலை (Online) மூலமாக விண்ணப்பிப்பதற்கான வசதிகள்...!!!

பிறப்பு, விவாக மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை நிகழ்நிலை(Online) மூலமாக சமர்ப்பிக்கும் வசதிகளை தற்போது தலைமை பதிவாளர் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறையானது  பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை வீட்டிலிருந்தவாறே ஸ்மார்ட் போன் அல்லது இணையவசதி கொண்ட கணினி மூலம் நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களுக்கான கட்டணங்களை Visa/Master Card வாயிலாக செலுத்துவதற்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பின்னர் பயனாளர் வழங்கும் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு கட்டணங்கள் செலுத்துவதற்கான இணைப்பு அனுப்பப்படும். குறித்த இணைப்பின் ஊடாக பயனாளர் விரும்பும் பிரதிக்கான கட்டணங்களை செலுத்த முடியும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை நேரடியாகவோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த நடைமுறை மூலம் பொதுமக்களின் நேர விரயம் தவிர்க்கப்படுவதோடு வீட்டிலிருந்தவாறே தங்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய முகவரி ஊடாகப் பயனாளர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்

Post a Comment

0 Comments