Advertisement

Responsive Advertisement

மர்மமான முறையில் இருவர் உயிரிழப்பு!

 


கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று வீடொன்றில் இருந்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கம்பி ஒன்றின் உதவியுடன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரகஸ்மங்ஹந்தியவில் கொரகீன பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நில்மினி மற்றும் நிஹால் என்ற இருவர் கடந்த 6 வருடங்களாக திருமணம் முடிக்காது ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதில் இந்த குற்றச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலியான 36 வயதான பெண் தனது முதல் கணவனை விட்டு விட்டு 39 வயதுடைய இந்த நபருடன் வந்து வாழ்ந்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணை கொலை செய்த நபர் அவரின் சடலத்திற்கு அருகில் பூங்கொத்து ஒன்றை வைத்து விட்டு வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சகோதரி ஒருவர் நேற்று அவருக்கு தொலைப்பேசி அழைப்பொன்றை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் பதிலளிக்காமையினால் பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.

அதன்படி, பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்ட போது குறித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments